வெள்ளி, நவம்பர் 17, 2017

மர்மமான தீவு முழுவதும் மிரட்டும் பொம்மைகள்சுற்றுலாவில் எப்போதும் விசித்திரமான இடங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதிலும் புதிரான இடங்கள் தனி கவனம் பெறும். அப்படியொரு இடம்தான் இந்தத் தீவும். இந்த தீவுக்கு எப்படி பொம்மைகள் வந்தன என்பதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான வரலாறு இருக்கிறது. அதனை இந்தக் காணொலி விளக்குகிறது. 

ஞாயிறு, நவம்பர் 12, 2017

உலகில் மிக நீண்ட ஆயுள் கொண்ட மக்கள் இவர்கள்தான்லகத்தில் அதிக வாழ்நாள் கொண்ட மக்கள் ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கிறார்கள். ஆனால், அவர்களைவிட அதிக ஆயுள் கொண்டவர்கள் இந்த மக்கள். இவர்களின் நீண்ட ஆயுளுக்கான காரணத்தை இந்தக் காணொலி சொல்கிறது. 

சனி, நவம்பர் 11, 2017

நான்காம் ஆண்டில் 'கூட்டாஞ்சோறு'


ந்த ஆண்டு கொஞ்சம் வலைபூவை விட்டு சற்று தூரமாக இருந்த ஆண்டாக சொல்லலாம். இந்த ஆண்டு முழுவதுமே அவ்வப்போதுதான் கூட்டாஞ்சோறுக்கு வரமுடிந்தது. அதற்கு காரணம் நான் புதிதாக ஆரம்பித்திருக்கும் யூ-டுயூப் சேனல்தான். அதன் மீது அதிக கவனம் செலுத்தியதால் வலைப்பக்கம் வரமுடியவில்லை. 


புதன், நவம்பர் 01, 2017

பாம்புக்கு பால் வார்ப்பதன் பின்னுள்ள ரகசியம்மது முன்னோர்கள் கடைபிடித்த பழக்கங்கள் பல மூடநம்பிக்கையாக தெரிந்தாலும் சிலவற்றில் ஆழமான காரணமும் அர்த்தங்களும் நிறைந்துள்ளன. எல்லாவற்றையும் மூடநம்பிக்கை என்று ஒதுக்கிவிட முடியாது. 

சிங்கப்பூர்: மெரினா பே சாண்ட்ஸ் - உல்லாசத்தின் பிரமாண்டம்பணம் படைத்தவர்களுக்கென்றே தனி உலகம் இருக்கிறது. அந்த உலகில் பணம்தான் எல்லாவற்றையும் பேசும். சிங்கப்பூரில் இருக்கும் இந்த மெரினா பே சாண்ட்ஸும் அதில் ஒன்று. இங்கு சுற்றுலாப் பயணிகள் உல்லாசம் அனுபவிக்க என்னென்ன இருக்கிறது என்பதை இந்த காணொலி சொல்கிறது.

திங்கள், அக்டோபர் 30, 2017

குளிர்காலத்தில் சுற்றுலா செல்ல இதெல்லாம் இருக்கணும்


கோடை காலத்தில் சுற்றுலா செல்வது பெரிய விஷயமில்லை. ஆனால் குளிர்காலத்தில் சுற்றுலா செல்வதற்கு நிறைய மெனக்கெட வேண்டும். ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை செலுத்த வேண்டும். அதனால் நமது மக்கள் பெரும்பாலும் குளிர்கால சுற்றுலாவை தவிர்த்து விடுகிறார்கள்.

ஞாயிறு, அக்டோபர் 29, 2017

நாகப்பாம்பு கக்கும் நாகரத்தினக் கல்லில் ஒளிந்திருக்கும் மர்மங்கள்


                              

பொதுவாகவே பாம்புகளைப் பற்றி ஏகப்பட்ட கதைகள் இருக்கின்றன. அதிலும் நாகப்பாம்பு என்றால் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். நாகப்பாம்பு என்றதும் அது கிட்டத்தட்ட 20 வருடங்களாக யாரையும் தீண்டாமல் சேர்த்து வைத்த விஷத்தை நாகரத்தினைக் கல்லாக கக்கும் விசித்திரம் இந்த பாம்புக்கு மட்டுமே சொந்தமானது.  இந்த நாகரத்தினம் தானாகவே ஒளி தரக்கூடியது. அதனால் அமாவாசை இருட்டில் நாகப்பாம்பு தன்னுடைய வயோகத்தில் இதன் வெளிச்சத்தில் இரை தேடும். பாம்புக்கு பயன்படும் இந்த ரத்தினக்கல்லை மனிதன் வைத்திருந்தால், அவன் மிகப் பெரிய உயரத்தை அடைவான். அவனை நோய்கள் அண்டாது. தீயசக்திகள் கண் காணா தூரத்துக்குப் போய்விடும்.

சனி, அக்டோபர் 28, 2017

அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்
உலகின் மிகப் பழமையான மொழி. மனித இனம் முதன் முதலில் பேசியதாக சொல்லப்படும் ஒரு மொழி இன்றைய நவீன கணினி யுகத்துக்கு ஈடு கொடுத்து நிற்கும் வல்லமை பெற்ற மொழியாக திகழ்கிறது. இத்தனை பெருமை மிகு மொழி தமிழர்களின் அலட்சியத்தாலும் ஆங்கிலத்தின் மீதுள்ள அளப்பரிய மோகத்தாலும் தானாகவே அழியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனைப் பற்றிய ஒரு காணொலி இது.வெள்ளி, அக்டோபர் 27, 2017

கடலுக்குள் தோன்றி மறையும் அதிசய ஆலயம்இதை ஓர் ஆன்மிக அதிசயம் என்றுதான் சொல்லவேண்டும். உலகில் பல இடங்களில் கடல் பின்வாங்கி மீண்டும் பழைய நிலைமைக்கு வருவது சாதாரண நிகழ்வாகத்தான் இருக்கிறது. ஆனால், அது எப்போதோ ஒரு முறை நடைபெறும். ஆனால், இங்கு தினமும் குறிப்பிட்ட நேரத்தில் கடல் உள்வாங்கி பின் மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறது. இது விஞ்ஞானத்துக்கும் பிடிபடாத ஒன்றாகவே இருக்கிறது. ஆனால், அந்த கடலுக்குள் கோயில் ஒன்று இருப்பதால் அது ஆன்மிக அதிசயமாக மாறியிருக்கிறது. அதை பற்றி இந்த காணொளியில் காணலாம். மேலும் அந்த இடத்துக்கு எப்படி போவது என்ற பயண வழிகாட்டுதலும் இருக்கிறது.வியாழன், அக்டோபர் 26, 2017

பாபநாசம்: ஒரு மசாலா டூரிசம்

அகத்தியரும் உலோப முத்திரையும்

பாபநாசம் சுற்றுலா: சிவன் கோயில், சொரிமுத்து அய்யனார், அகத்தியர் அருவி, களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயம், சேர்வலாறு அணை, காரையார் அணை, தமிழகத்தின் முதல் நீர்மின் நிலையம் 

தாமிரபரணி அணை

பொதுவாக சுற்றுலாக்கள் ஏதாவது ஒரு வகையை மட்டும் சார்ந்ததாக இருக்கும். ஆனால் பாபநாசம் அனைத்துவிதமான சுற்றுலா வகைகளையும் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. பாவங்களைப் போக்கும் பாபநாசம் ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல அனைத்துவிதமான சுற்றுலாவுக்கும் ஏற்றது. அதைப்பற்றி விரிவான கானொலிதான் இது.
புதன், அக்டோபர் 25, 2017

விளக்கெண்ணெயை சாதாரணமா நினைக்காதீங்க..!


விளக்கெண்ணெய் பல மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கின்றது. ஆனாலும் அதை பெரும்பாலானோர் மட்டமாகவே நினைக்கிறார்கள். அதற்கு காரணம் அது எளிய மக்களின் பயன்பாட்டுக்கானது என்பதால்தான். ஆனால் அதில் இருக்கும் மருத்துவ பண்புகள் வியப்பில் ஆழ்த்துகின்றன. இந்தக் காணொலி விளக்கெண்ணெய்யின் மருத்துவ குணங்களை விரிவாக சொல்கிறது. 


செவ்வாய், அக்டோபர் 24, 2017

டைட்டானிக்: கற்பனை ஒன்று நிஜமான கொடூரம்பொதுவாக உண்மையாக நடந்த சம்பவம் ஒன்றை மையமாக வைத்து கதை எழுதுவதுதான் நடைமுறையில் உள்ள வழக்கம். ஆனால், இங்கு ஒரு கற்பனையான கதை உண்மையாகியுள்ளது. மிக அபூர்வமாக சில சமயங்களில் இப்படி கற்பனைகள் உண்மையாவதுண்டு. அப்படி கற்பனை உண்மையானது டைட்டானிக் மூழ்கிய சம்பவத்தில் நடந்திருக்கிறது. 

டைட்டானிக் கடலில் மூழ்குவதற்கு 14 ஆண்டுகள் முன்பே ஒரு கற்பனை நாவல் இதை மையமாக வைத்து வந்திருக்கிறது. மேலும் அறிந்துகொள்ள கீழேயுள்ள காணொளியை கிளிக் செய்யவும்.


சனி, செப்டம்பர் 16, 2017

தங்கத்தை நமக்குத் தந்தது இந்த நட்சத்திரம்தான்
இந்த பூமியில் கிடைக்கும் உலோகங்களில் அதிக விலை மதிப்பு கொண்ட உலோகங்களில் தங்கமும் ஒன்று. இது ஆரம்ப காலங்களில் பூமியின் மைய பகுதியிலேயே இருந்தது. அந்தளவிற்கு மையத்தில் இருந்தால் யாராலும் தங்கத்தை எடுத்திருக்கவே முடியாது. ஆனால், திடீரென்று ஏற்பட்ட ஒரு அதிசயத்தால் பூமியின் மையத்திலிருந்து தங்கம் மேற்பகுதிக்கு வந்தது. அது எப்படி என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...