Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஆயுளை குறைக்கும் ஆஸ்பெஸ்டாஸ்..!

லிவான விலையில் உறுதியான ஒரு கூரையை வாங்க முடியுமா? அது ஆஸ்பெஸ்டாஸாக இருந்தால் முடியும். ஆஸ்பெஸ்டாஸ் எளிதில் தீப்பிடிக்காது என்பதற்காகவே வாகனங்களிலும், கப்பல்களிலும் கூட இதை ஏராளமாக பயன்படுத்தப்படுகிறார்கள். 


'சர்பன்டைன்', 'ஆம்பிபோல்' என்ற இரண்டு விதமான ஆஸ்பெஸ்டாஸ்கள் உள்ளன. 'சர்பன்டைன்' வகையில் 'கிரைசோலைட்'  என்ற வெண்மை நிற ஆஸ்பெஸ்டாஸ்தான் உலக அளவில் 95 சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. உறுதி மட்டுமல்லாமல் வெப்பத்தை தாங்கும் திறனும் இதில் இருப்பதால் கட்டுமான பணிகள், மின்சாதனங்கள் உள்பட 3 ஆயிரம் வேலைகளில் இது பயன்படுத்தப்படுகிறது.

இந்த ஆஸ்பெஸ்டாஸ் எப்படி மனித ஆயுளை குறைக்கிறது என்று பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். 'ஆஸ்பெஸ்டாஸ்' இழைகள் கண்ணுக்கு தெரியாத மிக நுண்துகள்களாக மாறக்கூடியவை. இந்த துகள்கள் கண்ணுக்கு தெரியாது. மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் மட்டுமே தெரியும். இவை எப்போதும் காற்றில் கலந்தே இருக்கும்.


ஆஸ்பெஸ்டாஸ் உற்பத்தி செய்யும் இடத்தில் மட்டுமல்ல, எடுத்துச்செல்லும்போது கழிவாக மாற்றி குப்பையில் தூக்கி எறியும்வரை சுற்றுச்சூழலை தொடர்ந்து மாசுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. இந்த இழைகள் ஒருமுறை காற்றில் கலந்து விட்டால் போதும். எங்குமே தங்குவதில்லை. இதனால் சுவாசித்தலின் போது மிக சுலபமாக மனித நுரையீரலுக்குள் புகுந்து தங்கிக்கொள்கிறது.

சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களை விட இதன் பாதிப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகம். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது இவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்களே. இங்கிலாந்தில் உற்பத்தி இடத்தில் உருவாகும் துகள்களை நீக்குவதற்காகவே அனுமதி பெற்ற ஒப்பந்தக்காரர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் இந்த துகள்களை நீக்க விண்வெளி வீரர்களை போன்ற பாதுகாப்பு கவச உடை அணிந்து, சிறப்பு சுவாச வசதி பெற்று நீக்குகிறார்கள். இப்படியெல்லாம் கடுமையான விதிகள் இருந்தும் கூட வாகன பிரேக் சரி செய்யும் வேலையில் இருப்பவர்கள் வருடத்திற்கு 500 முதல் 600 பேர் உயிர் இழக்கிறார்கள்.


சரி இதன் பாதிப்பு எப்படி தெரியும்? மூச்சிழைப்பு, நெஞ்சிருக்கம், வறட்டு இருமல், விரல்கள் ஊனமடைதல் ஆகியவை இந்நோயின் அறிகுறிகள். நுரையீரல் சுவர்கள் புண்ணாகித் தடித்துப் போகும். இதற்கு மருந்தே கிடையாது. இது மார்புச்சளி, இதயம் செயலிழத்தல், நுரையீரல் புற்றுநோயையும் ஏற்படுத்தும். இது இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 24 மாதங்களுக்குள் உயிரிழப்பார்கள். சுவாசத்தில் ஊடுருவும் இந்த துகள்கள் உடலில் நுழைந்து ரத்த ஓட்டத்தில் கலந்து சிறுநீரகம் பாதிப்படைய செய்து விடும்.

2000-ம் ஆண்டு வரை உலகின் மிகப்பெரிய உற்பத்தியையும், ஏற்றுமதியையும் செய்து வந்த கனடா, பிரான்ஸ் போன்ற நாடுகள் அப்போதே இதற்கு தடைபோட்டு விட்டன. இவற்றை தொடர்ந்து சுவிட்சர்லாந்து, டென்மார்க், ஆஸ்திரியா, ஐக்கிய அரபு நாடுகள், போலந்து, பிரிட்டன், ஐஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து போன்ற 50-க்கும் மேற்ப்பட்ட நாடுகள் தடைவிதித்து விட்டன.


இவற்றை தடுக்க ஆஸ்பெஸ்டாஸ் உபயோகிக்காமல் இருப்பது நல்லது. வேறுவழியில்லை. பயன்படுத்தித்தான் ஆக வேண்டும் என்ற சூழல் வரும்போது, அதன் மீது நன்றாக பெயின்ட் அடித்துவிடுங்கள். எப்போதும் ஈரத்தன்மையோடு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றால் பெரிய அளவில் நன்மை இல்லையென்றாலும் ஓரளவு பாதிப்பை குறைக்க முடியும். புதிய ஆஸ்பெஸ்டாஸை விட பழைய ஆஸ்பெஸ்டாஸில்தான் பாதிப்பு பல மடங்கு அதிகம். 

வீடுகளுக்கு ஆஸ்பெஸ்டாஸ் கூரை அமைப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.!


14 கருத்துகள்

  1. நல்ல பகிர்வு. இது பற்றிய தகவல்கள் படித்திருக்கிறேன். இன்னமும் விழிப்புணர்வு பலரிடமும் இல்லை என்பது தான் சோகம்.

    பதிலளிநீக்கு
  2. அறியாத தகவல் நண்பரே
    அச்சுருத்தக் கூடிய தகவல் அல்லவா
    ஆயினும் தாராளமாக எங்கெங்கும் புழக்கத்தில் உள்ளதே
    தம+1

    பதிலளிநீக்கு
  3. ஆம் செந்தில்/சகோ, இது பற்றிய தகவல்கள் அறிவோம். ஆனால் நம்மூரில் இன்னும் அதற்கான விழிப்புணர்வு வரவில்லை என்றே தோன்றுகின்றது.

    கீதா: மேலே சொன்னவற்றுடன் ..அமெரிக்காவில் வீடு வாடைகைக்கு எடுக்கும் போது அந்த ஓனரோ, இல்லை அபார்ட்மென்ட் மேலாளரோ நமக்குச் சொல்லிவிடுவார்கள். இந்த வளாகத்திற்குள் ஆஸ்பெஸ்டாஸ் இருக்கிறது. ஆஸ்பெஸ்டாஸ் எத்தனை சகவிகிதம் இருக்கிறது. அரசாங்கத்தின் சட்டத்திற்கு உட்பட்ட சதவிகிதம் எந்த இடத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது என்ற பல தகவல்கள் கொடுத்து உங்களில் யாருக்கேனும் அலர்ஜி இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி யோசித்துக் கொள்ளுங்கள். என்று சொல்லிவிடுவார்கள். அஸ்பெஸ்டாஸ் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வளாகத்தில் வாடகை குறைவாக இருக்கும். இப்படிப் பல ரூல்ஸ் ரெகுலேஷன்ஸ் எல்லாம் சொல்லி, கையெழுத்து வாங்கிவிட்டுத்தான் வாடகைக்குக் கொடுப்பார்கள். அந்த அளவிற்கு அங்குச் சட்டம் இருக்கிறது. ஏமாற்ற முடியாது. ஏமாற்றினால் அவ்வளவுதான் நஷ்ட ஈடே பெரும் பகுதி, கோர்ட் கேஸ் என்று...அபார்ட்மென்ட் மேலாளர் என்றால் வேலை நீக்கம் என்று.... எனவே கவனமாகத்தான் இருப்பார்கள். நம் இஷ்டம்தான்..தீர்மானம்தான்.

    இங்கு அப்படி எல்லாம் இருந்துவிட்டால்...ஹும் அப்புறம் என்னாவது நம்மூர் உலக அரங்கில் முன்னில் நிற்காதோ?!!!!

    பதிலளிநீக்கு
  4. அறியாத தகவல்! அதுமட்டுமல்ல! அரிய தகவல்!

    பதிலளிநீக்கு
  5. விழிப்புணர்வு கூட்டும் அருமையான தகவல். இங்கு ஆஸியில் ஆஸ்பெஸ்டாஸ் என்றாலே நல்லபாம்பைக் கண்டதுபோல் நடுங்குவார்கள். ஒருமுறை பள்ளியில் கூரையின் சிறுபகுதி உடைந்து விழ, அது நீக்கப்பட்டு சுத்தம் செய்யப்படும்வரை ஒருவாரகாலம் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

    பதிலளிநீக்கு
  6. மிக நல்ல தகவல்..
    பயன்படுத்தும் தகவல் எல்லாமே பயமுறுத்தும் பொருளாகவே தெரிகிறது..

    ஆப்பிளிலிருந்து ஆஸ்பெட்டாஸ் வரை..

    பதிலளிநீக்கு
  7. மிக நல்ல தகவல்..
    பயன்படுத்தும் தகவல் எல்லாமே பயமுறுத்தும் பொருளாகவே தெரிகிறது..

    ஆப்பிளிலிருந்து ஆஸ்பெட்டாஸ் வரை..

    பதிலளிநீக்கு
  8. பயனுள்ள அரிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.ஆஸ்பெட்டாஸ் பற்றி தெரிந்துக் கொண்டேன் .

    பதிலளிநீக்கு
  9. அச்சுறுத்தும் தகவல்கள். நல்ல எச்சரிக்கைத் தகவல்கள். எல்லோரையும் சென்றையவேண்டிய தகவல். ஆனால் ஒன்றும் செய்ய முடியாது! விதி!

    பதிலளிநீக்கு
  10. பெரும்பாலான வீடுகள் ஆஸ்பெட்டாஸ்தான்..... தகவலுக்குநன்றி!..

    பதிலளிநீக்கு
  11. தொடர்ந்து உங்களின் வலைப்பக்கத்தில் பயணிக்கிறேன். அப்படி வந்து போகும் சமயமெல்லாம் ஏதோ ஒரு புதிய தகவலை அறிந்து கொள்கிறேன். எங்கிருந்து இப்படியான தகவல்களைத் திரட்டுகிறீர்கள் என்ற ஆச்சர்யம் ஒரு புறமிருந்தாலும் அதற்கான மெனக்கெடலை யோசிக்கும் போது பாராட்டுதல்களைச் சொல்லாமல் நகர முடியவில்லை.
    என் வலைப்பக்கத்தில் முகவரிகளின் முகவரியில் கூட்டாஞ்சோறை என் நண்பர்களுக்கு அறியத் தந்திருக்கிறேன். வாய்ப்பிருப்பின் வாசியுங்கள்.

    பதிலளிநீக்கு
  12. இதற்கு மாற்று மார்க்கெட்டில் வந்து விட்டதே ,அஸ்பெஸ்டாஸ் பயன்பாடு குறைந்து வருகிறது !

    பதிலளிநீக்கு
  13. இந்த கல்நார் தகடுகள் உண்டாக்கும் தீமை பற்றி இப்போது பரவலாக தெரிந்திருப்பதால் அதனுடைய பயன்பாடு குறைந்திருக்கிறது என எண்ணுகிறேன். இருப்பினும் அரசு இதை முழுமையாக தடை செய்யவேண்டும். தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை