ஞாயிறு, ஜூன் 18, 2017

மர்மங்கள் நிறைந்த கொல்லிமலை அருவிகள்


கொல்லிமலை என்றதுமே அது ஏதோ மர்மங்கள் நிறைந்த பிர்ரதேசமாகத்தான் எல்லோரும் பார்க்கிறார்கள். உண்மையில் அப்படித்தான் இருக்கிறதா என்ற சந்தேகத்திலே பல சுற்றுலாப் பயணிகள் அங்கு வருவதில்லை. இப்படி அவர்கள் வராததால அதன் இயற்கை வளம் கெடாமல் இருக்கிறது. உண்மையில் கொல்லிமலை எப்படிப்பட்ட இடம்? அங்கு மர்மங்கள் இருக்கிறதா என்பதை மிக விரிவாக இந்தக் காணொளி பேசுகிறது. அதோடு சுற்றுலா செல்பவர்களுக்கு பல தகவல்களை சொல்கிறது. தவறாமல் பாருங்கள் பல புதுப்புது தகவல்கள் கிடைக்கும். 

மர்மங்கள் நிறைந்த கொல்லிமலை அருவிகள்15 கருத்துகள்:

 1. இந்த முறை தமிழகம் வந்த போது கொல்லிமலை பயணிக்க திட்டம் இருந்தது. கடைசி நேரத்தில் செல்ல முடியாமல் போனது....

  தகவல்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த முறை வரும்போது சென்று பாருங்கள். உங்கள் பயண எழுத்துக்கு நல்ல தீனி கிடைக்கும் இடம்.
   வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

   நீக்கு
 2. சுவாரஸ்யம். விவரங்கள் ஓகே. ஆனால் மர்மங்கள் பற்றி விவரம் இல்லையே....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மர்மங்கள் இல்லை என்பதுதான் உண்மை. இதை ஆரம்பத்திலே சொல்லிவிட்டேன். மீண்டும் காணொளி பார்த்தால் தெரியும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 3. நான் இந்த அருவிக்கு 28 வயதில் நண்பர்களோடு சென்றுள்ளேன். மர்மம்லாம் இல்லை. ரொம்ப நேரம் அருவித் தண்ணீரில் குளித்துவிட்டு திருப்பி மேடான மண்பாதையில் ஏறிவர முடியாமல் ரொம்ப சிரம்ப்பட்டோம். 90ல் சுத்தமா இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க மகிழ்ச்சி. இன்றும் இடங்கள் தூய்மையாகத்தான் இருக்கிறது. அதற்கு காரணம் சுற்றுலாப் பயணிகளின் குறைவான வருகையே.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நெல்லைத் தமிழன்.

   நீக்கு
 4. கொல்லிமலையின் மற்றொரு பக்கம் கண்டேன். மக்கள் வராமல் இருப்பது ஒருவிதத்தில் நல்லதுதான் போலுள்ளது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவகையில் தாங்கள் சொல்வது உண்மைதான். மனிதர்களின் குறைவான நடமாட்டம் இயற்கையை அப்படியே மாசுபடாமல் வைத்திருக்கிறது.
   தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அய்யா!

   நீக்கு
 5. சேலத்தில் ஐந்து ஆண்டுகள் இருந்தும் கொல்லிமலைக்கு செல்ல இயலவில்லை. அப்போது இப்போதுள்ளதுபோல் சாலைகள் இல்லாதது காரணம்.
  கொல்லிமலை அருவிகள் பற்றிய தகவல்கள் அருமை. காணொளி மூலம் பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போது கண்டிப்பாக போய்வாருங்கள். இயற்கையோடு இரண்டு நாட்களை கழித்த திருப்தி ஏற்படும்.
   தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா!

   நீக்கு

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...