Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

சத்தான சிறுதானியங்களை தேர்வு செய்ய இதெல்லாம் அவசியம்



இன்று இயற்கையாக விளைவிக்கப்பட்ட உணவுகள் மீதும் சிறுதானியங்கள் மீதும் அளவற்ற காதல் மக்கள் மத்தியில் பிறந்திருக்கிறது. இதற்கு காரணம் ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லி மருந்துகளும் நம் உடலுக்கு கொண்டுவந்து சேர்த்திருக்கும் தீங்குகள்தான். அதனால் ஆர்கானிக் உணவுகள் மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பெற்றிருக்கிறது. ஆனாலும் இவற்றிலும் போதிய விழிப்புணர்வு நம்மிடையே இல்லை. சிறுதானிய உணவுகளிலும் அரிசியைப் போன்றே சத்துக்களை நீக்கிவிட்டு வெறும் சக்கையைத்தான் சாப்பிடுகிறோம் என்று சிறுதானிய நிபுணர் சொல்கிறார். 

சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்கள் எவை? அதனை எப்படி கண்டறிவது? சிறுதானியங்களால் கிடைக்கும் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பற்றி விரிவாக பேசுகிறார். இதுமட்டுமல்ல, இன்று சிறுதானியங்கள் மீது மக்களுக்கு ஆர்வம் இருந்தாலும் அவற்றை எப்படி சுவையாக சமைத்து உண்பது என்பது பலருக்கும் தெரியவில்லை. அதனாலே பலரும் சிறுதானியங்களை ஒதுக்கிவிட்டு மீண்டும் அரிசியின் பக்கமே தங்கள் கவனத்தை திருப்புகிறார்கள். அந்தக் குறையை நிவர்த்தி செய்யும் வகையில்
இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறுதானியங்கள் மூலம் சுவையாக செய்யக்கூடிய உணவுகள் பற்றிய செய்முறை விளக்கங்களை தொடர்ந்து தரவிருக்கிறோம். அதனை பார்த்து ஞாயிற்றுக்கிழமை உங்கள் குழந்தைகளுக்கு அந்த உணவுகளை செய்து கொடுக்கலாம். இதன்மூலம் குழந்தைகளை சிறுதானிய உணவுகள் பக்கம் திருப்பலாம். இதனால் ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாகும். சிறுதானியங்கள் குறித்து உங்களுக்கு எழும் சந்தேகங்களை கமெண்ட் பாக்சில் தெரியப்படுத்துங்கள்.


2 கருத்துகள்

  1. சகோ எங்கள் வீட்டில் சிறுதானியங்களை நிறையவே பயன்படுத்துகிறோம் பல வருடங்களாக. சிறுதானியங்களில் செய்யப்படும் பல உணவுவகைகளைச் செய்கிறோம்...தவிடு நீக்கப்படாத தானியங்களையும் தான் வாங்குகிறோம்....நல்ல பயனுள்ள பதிவு,,,வீடியோ!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!

      நீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை