Full Width CSS

" href="javascript:;">Responsive Advertisement

ஒரு கோடி பார்வைகள்; 2 லட்சம் சந்தாதாரர்கள்; ஒரு வெள்ளி விருது



பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்,

தொடர்ந்து உங்கள் அனைவரையும் பதிவுகள் வாயிலாக சந்திக்க வேண்டும் என்ற ஏராளமான ஆர்வம் இருந்தாலும் பலவித சூழல்கள் காரணமாக அது தொடர்ந்து முடியாமலே போகிறது. இப்போதும் அப்படித்தான். பதிவு மூலமாக தங்களை சந்திக்கவில்லை. அதற்கு பதிலாக சில மகிழ்ச்சிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இந்த மிகிழ்ச்சிகளை எனக்கு தந்தது வழக்கம்போல் யூடியூப் தான்.

'எஸ்பிஎஸ் மீடியா' என்ற பெயரில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் யூடியூப் சேனல் ஆரம்பித்து நடத்தி வருவது தாங்கள் அனைவரும் அறிந்ததே!  தற்போது அந்த சேனல் ஒரு கோடி பார்வைகளை கடந்திருக்கிறது. இரண்டு லட்சம் சந்தாதார்களை பெற்றிருக்கிறது. இதுபோக யூடியூப் சார்பாக ஒரு வெள்ளி விருதும் கிடைத்திருக்கிறது.


இந்த விருது ஒரு லட்சம் சந்தாதாரர்களை சேனல் கடந்தபின் யூடியூப் அந்தந்த சேனலுக்கு 'யூடியூப் கிரியேட்டர் அவார்ட்' என்ற பெயரில் அனுப்பி வைக்கும். இது வெளிநாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்படுவதால் நமது இடத்தை வந்தடைய  6 வாரங்கள் முதல் 10 வாரங்கள் வரை கால அவகாசம் எடுத்துக்கொள்ளும். யூடியூப் நிர்வாகம் சார்பாக அதன் சிஇஓ சூசன் கையெழுத்திட்ட பாராட்டு கடிதத்துடன் நம்மை வந்தடையும். இது ஒவ்வொரு யூடியூப்பருக்கும் பெருமை அளிக்கும் வெகுமதி. அதுவும் சேனலுக்கு கிடைத்திருக்கிறது.  

ஒரு லட்சத்திற்கு வெள்ளி விருது, 10 லட்சத்திற்கு தங்க விருது, ஒரு கோடி சந்தாதாரர்களுக்கு வைர விருதும் வழங்கப்படும். அந்த வரிசையில் முதல் விருதை பெற்ற மகிழ்ச்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

அன்புடன்,
எஸ்.பி.செந்தில் குமார் 

சேனலில் வெளியிடப்பட்ட வீடியோக்கள் எண்ணிக்கை: 252

இந்த ஒரு வருடத்தில் சேனல் மூலம் பெற்ற வருமானம் : 4,000 அமெரிக்க டாலர்கள் 

-----------------------


விருது சம்பந்தமான வீடியோ 


நண்பர்கள் அனைவருக்கும் அன்பான ஒரு வேண்டுகோள்.

எனது சேனலில் மருத்துவம், உடல் நலம் மற்றும் அழகு சம்பந்தமான வீடியோக்கள் நல்ல வரவேற்பு பெற்றது. அதில் பலரும் இந்தவகை வீடியோக்களை தனியாக ஒரு சேனலில் போடுங்களேன் என்று ஆலோசனை கூறினார்கள். அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப 'Health & Beauty Plus' என்ற புதிய சேனலை துவங்கியிருக்கிறேன். வழக்கம் போல் நம் நண்பர்கள் அந்த சேனலையும் subscribe செய்து ஆதரவு தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

புதிய சேனலுக்கான அறிமுக வீடியோ.







7 கருத்துகள்

  1. வாழ்த்துக்கள்....அருமை..


    தொடரட்டும் தங்கள் பணி..

    பதிலளிநீக்கு
  2. நிதானமாக அதே சமயம் இலக்குவைத்து முன்னேறுகின்ற உங்களது பாணி போற்றத்தக்கது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

புதியது பழையவை